திருவண்ணாமலையில் கட்டப்பட்டுள்ள முன்னாள் படைவீரர் மாளிகையின் முதல் தளத்தில் 9 விருந்தினர் அறைகள் உள்ளன. முன்னாள் படைவீரர்கள் மற்றும் அலுவலர்கள், மத்திய, மாநில அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்குவதற்காக அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. எனவே, அறைகள் முன்பதிவு செய்ய முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். தகுதியுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.