திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில், வருகின்ற ஏழாம் தேதி விநாயகர் சதுர்த்தி தின விழா கொண்டாடுவதை முன்னிட்டு மாவட்டம் முழுவதிலும் விநாயகர் சிலை வைப்பது குறித்தும் அதனை தொடர்ந்து விஜிர்சன ஊர்வலம் குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பழனி, அரசு அலுவலர்கள் இந்து முன்னணி அமைப்பினர் கலந்து கொண்டனர்.