திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியம், தென்மதிமங்கலம் ஏழுமலையான திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பெ. சு. தி. சரவணன் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
உடன்,
கலசப்பாக்கம் ஒன்றிய கழகச் செயலாளர்கள் சிவக்குமார், சுப்ரமணியன் , கலசப்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.