திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, காஞ்சி குன்றுமேடு அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவில் வளாகம் புனரமைக்கப்பட்டு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று புனித நீரை கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான பெ. சு. தி. சரவணன்
கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
உடன்,
கலசப்பாக்கம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சுப்பிரமணியன், புதுப்பாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கி. ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கா. சு. இளங்கோவன், மாவட்ட ஆதிதிராவிடர் அணி தலைவர் ரா. மனோகரன், திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.