திருவண்ணாமலை காந்திநகரில் உள்ள ஸ்ரீ நாராயண திருமண மண்டபத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் செயல்படும் மகளிர் தையல் தொழிற் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள் மூலம் 2024-2025 - ஆம் கல்வி ஆண்டிற்கான
விலையில்லா பள்ளி சீருடைகள் தைப்பதற்கான ஆலோசனை கூட்டம் இன்று (07. 06. 2024) மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப. , அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மகளிர் தையல் தொழிற் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.