அ. தி. மு. க. ஆலோசனை கூட்டம்!

2661பார்த்தது
அ. தி. மு. க. ஆலோசனை கூட்டம்!
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றிய அ. தி. மு. க சார்பில் ஒன்றியத்தைச் சேர்ந்த மேக்களூர், கழிக்குளம் ஆகிய ஊர்களில் அ. தி. மு. க. பூத் கமிட்டி அமைத்தல், திரு வண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் அறிமுக கூட்டம், கட்சி வளர்ச்சி, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது ஆகியவை குறித்து ஆலோசனைக் கூட்டங்கள் நடந்தன.

கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சி. தொப்பளான் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளருமான எஸ். ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி