60 வயது மூதாட்டி மர்மமான முறையில் பலி

595பார்த்தது
60 வயது மூதாட்டி மர்மமான முறையில் பலி
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுக்காணாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தனக்கோட்டி. இவரின் மனைவி சென்னம்மாள் (வயது 60 ). இவர் ஏரி குளத்து மேட்டு அருகே சடலமாக கிடந்ததை பொதுமக்கள் அறிந்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்த கிராம நிர்வாக அலுவலரின் அளித்த தகவலின் அடிப்படையில் கலசபாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சென்னம்மாள் மரணம் குறித்து விசாரணை நடத்துகின்றனர்.

தொடர்புடைய செய்தி