இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூா் திருமூலா் தெருவைச் சோ்ந்தவா் அருணகிரி. இவரது மனைவி குணா(55). இவா்களுக்கு கிருஷ்ணவேணி என்ற மகள், பாலாஜி என்ற மகன் உள்ளனா். மகள் கிருஷ்ணவேணியை ராணிப்பேட்டை மாவட்டம், கலவையில் திருமணம் முடித்து கொடுத்துள்ளாா். மகன் பாலாஜி செய்யாறு சிப்காட் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இந்த நிலையில், குணா நவ. 1-ஆம் தேதி தனது மகன் பாலாஜியுடன் பைக்கில் கலவையில் வசித்து வரும் மகள் கிருஷ்ணவேணிக்கு தீபாவளி பலகாரம் கொடுத்துவிட்டு செய்யாறு திரும்பிக் கொண்டிருந்தாா். செய்யாறு - ஆற்காடு சாலையில் தூளி கூட்டுச்சாலை அருகே வந்த போது, அங்குள்ள வேகத்தடையில் பைக் ஏறி இறங்கியதாகத் தெரிகிறது. இதில், பாலாஜியும், அவரது தாய் குணாவும் தூக்கி வீசப்பட்டதில் மயக்கமடைந்தனா். உடனே அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக குணா வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.