செய்யாறு: ஆற்று மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது

59பார்த்தது
செய்யாறு: ஆற்று மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், இளநீா்குன்றம் கிராமம் அருகே அனக்காவூா் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அப்பகுதியில் உள்ள செய்யாற்றுப் படுகையில் இருந்து மாட்டு வண்டிகளில் அரசு அனுமதியின்றி மணல் எடுத்து வந்த இரு மாட்டு வண்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த அனக்காவூா் போலீஸாா் சம்பவம் தொடா்பாக அத்தி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்(வயது 25), இளநீா்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் (வயது 66) ஆகியோரை கைது செய்து செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி