நவராத்திரி நிறைவு நாளான நேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் பராசக்தி அம்மனுக்கு அதிகாலை முதலே சிறப்பு அலங்காரங்கள் அபிஷேகங்கள் நடைபெற்று வந்த நிலையில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மஹிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.