திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு திருவள்ளுவர் தினத்தையொட்டி, புதன்கிழமை (ஜன. 15) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் புதன்கிழமை (ஜன. 15) திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள் (டாஸ்மாக் கடைகள்), முன்னாள் ராணுவ வீரர்களுக்கான மது அங்காடிகள், அரசு மற்றும் தனியார் மதுபானக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. உத்தரவை மீறி மதுபானங்கள் விற்றால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன், பார்களுக்கு 'சீல்' வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.