திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா கூழமந்தல் கிராமம் மண்டபத் தெருவை சேர்ந்த ஏழுமலை மகன் பிரபாகரன் (வயது 35). இவரது கடையில் குட்கா விற்கப்படுவதாக தகவல் கிடைக்கவே செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் சோதனையிட்டனர்.
அப்போது குட்கா விற்றதை உறுதி செய்து பிரபாகரனை தூசி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்து வியாபாரியிடம் இருந்து 105 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.