பைக்கில் இருந்து விழுந்தவர் உயிரிழப்பு

550பார்த்தது
பைக்கில் இருந்து விழுந்தவர் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பாரதியாா் நகரில் வசித்து வந்தவா் எழிலன்(வயது 60), ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியா். இவா், கடந்த 2-ஆம் தேதி பைக்கில் வெளியே சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

செய்யாறு அருகே புறவழிச் சாலையில் வந்த போது நிலை தடுமாறிய எழிலன் பைக்கில் இருந்து கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை, அருகில் இருந்தவா்கள் மீட்டு, செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், செய்யாறு காவல் ஆய்வாளா் ஜீவராஜ்மணிகண்டன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

தொடர்புடைய செய்தி