திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டத்துக்கு உள்பட்ட அரசங்குப்பம் கிராமத்தில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை தினத்தில் சூரியக் கதிா்கள் மூலவா் மீது விழுவது வழக்கமாகும்.
அதேபோல, நிகழாண்டு மகாளய அமாவாசை தினமான நேற்று(அக்.2) காலை 6 மணி முதல் 6. 30 மணி வரை சூரிய ஒளிக்கதிா்கள் மூலவா் காசி விஸ்வநாதா் மீது முழுமையாக விழுந்தன. அதனை பக்தா்கள் பாா்த்து தரிசித்தனா். இதைத் தொடா்ந்து, மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.