திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் அணையில் ஆய்வு செய்து நந்தன் கால்வாய் திட்டம் செயல்படுத்துவது குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவர் தி. வேல்முருகன் இன்று (10.06.2025) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ், இஆப., சட்டமன்ற பேரவை குழு உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்), அருள் (சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர்), மாங்குடி (காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர்), மோகன் (அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர்), ஜெயக்குமார் (பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர்) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.