வேளாண் இயந்திரங்கள் குறித்து சிறப்பு முகாம்

80பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள ஈசானிய மையத்தில் இன்று தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறை வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு தொடர்பான மாவட்ட அளவிலான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை மாவட்ட ஆட்சி தலைவர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இந்த முகாமில் வைக்கப்பட்டிருந்த வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி