தனியார் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா

58பார்த்தது
தனியார் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா
திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில், மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் டி. சா்வேசன் தலைமை வகித்தாா். நிா்வாக அலுவலா் ஏ. கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.

துறைத் தலைவா்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் இணைந்து கல்லூரியின் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நட்டனா். விழாவில், கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் எஸ். சுபாஷ் மற்றும் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்தி