வெம்பாக்கம் ஒன்றியம், நரசமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் பள்ளி மாணவா்கள் 2 ஆயிரம் பேருக்கு வருவாய்த் துறை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி வெம்பாக்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட நரசமங்கலம் கிராமத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். எம். எஸ். தரணிவேந்தன் எம். பி. , ஒ. ஜோதி எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றியத் தலைவா் த. ராஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு பாா்வையாளராக முதல்வா் பிரிவு தனி அலுவலா் அரவிந்தன் கலந்து கொண்டாா்.
முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் பேசினார்.