செய்யாறு: சிபிஎஸ் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம்

57பார்த்தது
செய்யாறு: சிபிஎஸ் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம்
செய்யாறு சார்- ஆட்சியர் அலுவலகம் அருகே, கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் சிபிஎஸ் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே. வெங்கடேசன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் தவமணி முன்னிலை வகித்தார். 

மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயராஜ், ராஜேஷ்வரன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது, ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைத்த அலுவலர் குழுவை அரசு திரும்பப் பெற வேண்டும். ராஜஸ்தான், ஜார்கண்ட், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது போன்று தமிழகத்திலும் அமல்படுத்தவேண்டும். 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி பிற மாநிலங்களில் சிபிஎஸ் திட்ட ஊழியர்களுக்கு வழங்குவது போல, பணிக்கொடை மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம உதவியாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றதால், பாதுகாப்புப் பணியில் இருந்த செய்யாறு போலீசார் 17 பெண்கள் உள்பட 43 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தொடர்புடைய செய்தி