திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் தொகுதி, வெம்பாக்கம் ஒன்றியம், வெம்பாக்கம் பயணியர் நிழற்குடை மற்றும் அழிவிடை தாங்கள் ஊராட்சியில் சமுதாய கூடத்தை பொதுப்பணி மற்றும் நெஞ்சாலைத் துறை அமைச்சர் எ. வ. வேலு தலைமை தாங்கி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். உடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் M. S. தரணிவேந்தன், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் O. ஜோதி, வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் S. அம்பேத்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதிசீனிவாசன், அரசுதுறை அதிகாரிகள், ஒன்றிய குழு பெருந்தலைவர்கள், ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.