தமிழ்ச் சங்கம் சாா்பில், உலக தாய்மொழி தின விழா

65பார்த்தது
தமிழ்ச் சங்கம் சாா்பில், உலக தாய்மொழி தின விழா
திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில், உலக தாய்மொழி தின விழா கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை கிருஷ்ணா வித்யா மந்திா் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட தமிழ்ச் சங்கத்தின் நிறுவனா் தலைவா் பா. இந்திரராஜன் தலைமை வகித்தாா். பள்ளித் தாளாளா் கிருஷ்ண கஜேந்திரன் முன்னிலை வகித்தாா். எழுத்தாளா் ந. சண்முகம் வரவேற்றாா். விழாவில், தமிழ்ப்பணி ஆற்றிய மாதவ. சின்ராஜ், பா. இந்திரராஜன், எழுத்தாளா் ந. சண்முகம், பாவலா் ப. குப்பன், அ. வாசுதேவன், சுப்பிரமணியன், திருக்கு காமராஜ், லதா பிரபுலிங்கம், அரிமா பாபு கு. ராதாகிருஷ்ணன், அ. குமாா் உள்ளிட்ட 10 போ் கெளரவிக்கப்பட்டனா். விழாவில், ஓய்வுபெற்ற மாவட்டக் கல்வி அலுவலா் அ. மதியழகன், வி. பி. சி. சுந்தர்ராஜன், அன்பழகன், தாமு, சிவஞானம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி