திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெங்களத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கபடி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.
கபடி போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் முருகன் ஆகியோரை பள்ளித் தலைமை ஆசிரியர் சண்முகம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.