திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் தொகுதி வெம்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு பெருந்தலைவர் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தலைவர்கள் பெயர் பலகை கல்வெட்டை திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், ஆரணி பாராளுமன்ற உறுப்பினருமான M. S. தரணிவேந்தன் திறந்து வைத்து வெம்பாக்கம் ஒன்றிய குழு பெருந்தலைவர் D. ராஜி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
உடன் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதிசீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் JK. சீனிவாசன், N. சங்கர், M. தினகரன், மாவட்ட நிர்வாகிகள் கழக நிர்வாகிகள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.