தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஒன்றிய அலுவலக கட்டிடத்தை திறந்துவைத்தார். அதனை தொடர்ந்து வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். அம்பேத்குமார் சிறப்பு உழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி அலுவலக கட்டிடத்தை திறந்துவைத்தார். உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ந. பாண்டுங்கன் உட்பட அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஒ. செ. எம். டி. மனோகரன், கே. டி. ராமசாமி, பேரூராட்சிமன்றத் தலைவர் வேணி ஏழுமலை, சேர்மன் இந்திரா இளங்கோவன், இலக்கிய அணி கவிஞர். மா. ஏழுமலை, துணை சேர்மன் லலிதாலட்சமிவேலன், மாவட்ட கவுன்சிலர் நித்தியபிரியாநடராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.