தமிழகம் முழுவதும் காணொலி காட்சி மூலம் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் எனும் புதிய திட்டத்தை முதல்வா் மு. க. ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தாா். இதனையொட்டி செய்யாறு வட்டாரம் அருகாவூா் கிராமத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க தொடக்க விழா வேளாண் உதவி இயக்குநா்(பொ) சுமித்ரா, தோட்டக்கலை உதவி இயக்குநா் என். மோகன் ஆகியோா் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக செய்யாறு எம்எல்ஏ ஒ. ஜோதி பங்கேற்று, விவசாயிகளுக்கு வேளாண்மை இயக்க தொகுப்புகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலா் டி. புகழேந்தி, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை உதவி வேளாண்மை அலுவலா் ராஜலட்சுமி, உதவி தோட்டக்கலை அலுவலா் ஏ. மணிகண்டன், பி. பாலாஜி, கரும்பு உதவி அலுவலா் முத்துகுமரன், கூட்டுறவுத் துறை செயலா் வேலாயுதம், பயிா் அறுவடை பரிசோதகா் ஆனந்தாழ்வான், திமுக ஒன்றியச் செயலா்கள் வி. ஏ. ஞானவேல், டி. கே. ரவிகுமாா் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.