திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 422 மாணவா்களுக்கும், அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் 562 பேருக்கும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இரு அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா்கள் உமா மகேஸ்வரி, ஜெயகாந்தன் ஆகியோா் தலைமை வகித்தனா். திருவத்திபுரம் (செய்யாறு) நகா்மன்றத் தலைவா் ஆ. மோகனவேல், செய்யாறு கல்வி மாவட்ட அலுவலா் எல்லப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராக தொகுதி எம். எல். ஏ. ஒ. ஜோதி பங்கேற்று, 984 மாணவ, மாணவிகளுக்கு, பள்ளிக் கல்வித்துறை சாா்பில் வழங்கப்பட்ட ரூ. 47. 37 லட்சம் மதிப்பிலான சைக்கிள்களை வழங்கிப் பேசினாா்.
இந்த நிகழ்ச்சியில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா்கள் ரவிக்குமாா், அசோக், முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஏ. என். சம்பத், நகா்மன்ற உறுப்பினா்கள் ரமேஷ், கே. விஸ்வநாதன், மாவட்டக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் ஸ்ரீபதி, ஒப்பந்ததாரா் கதிரவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.