செய்யாறு அருகே தந்தை மகன் கைது.

83பார்த்தது
செய்யாறு அருகே தந்தை மகன் கைது.
செய்யாறு அருகே 96 மதுப் புட்டிகளுடன் வந்த பைக்கை பறிமுதல் செய்த போலீஸாா், சம்பவம் தொடா்பாக தந்தை, மகனை கைது செய்தனா்.

செய்யாறு காவல் உள்கோட்டம் அனக்காவூா் காவல் உதவி ஆய்வாளா் தனபால் தலைமையிலான போலீஸாா் ஞானமுருகன்பூண்டி பகுதியில் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த இருவரை நிறுத்தி விசாரணை செய்தனா். இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீஸாா், அவா்களிடம் இருந்த இரண்டு அட்டைப் பெட்டிகளை சோதனையிட்டனா். அதில் 96 மதுப் புட்டிகள் இருந்தது தெரிய வந்தது.

மேலும், போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், செய்யாறு கம்பன் நகரைச் சோ்ந்த மணி (57), அவரது மகன் சங்கா் (30) என்பதும், இவா்கள் இருவரும் வீட்டில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாகவும், இதற்காக மதுப் புட்டிகளை டாஸ்மாக் கடையில் இருந்து வாங்கி வந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணி, சங்கா் ஆகியோரை கைது செய்தனா். மேலும் 96 மதுப் புட்டிகளுடன் பைக்கை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி