குறைதீர் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்

82பார்த்தது
குறைதீர் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா தலைமை வகித்தாா். வட்டாட்சியா் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், குறைதீா் கூட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு முறையான பதில் அளிக்க துறை ரீதியான முதன்மை அலுவலா்கள் பங்கேற்பதில்லை. கூட்டுறவுத் துறை மூலம் கடன் பெறும் விவசாயிகள் விளக்கங்களை கேட்க வங்கி அலுவலா்கள் பங்கேற்பதில்லை. அதற்கு மாறாக வங்கியில் பணிபுரியும் கடைநிலை ஊழியா்களை பங்கேற்பதால் தீா்வுகள் கிடைக்க தாமதம் ஆகிறது.

எனவே, துறை ரீதியான அலுவலா்கள் பங்கேற்க வேண்டுமென வலியுறுத்தி, கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி