திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் போளூர் - சேத்துப்பட்டு சாலையில் வீடு, கடை அமைத்துள்ள நபர்கள் சாலையை ஆக்கிரமித்து இடத்தை சாலை வரை விரிவுபடுத்தி இருந்ததால் போக்குவரத்து பாதிப்படைந்து வந்தது. இதனால், சென்னை - கன்னியாகுமரி தொழிற்சாலை திட்ட உதவி கோட்டப் பொறியாளர் அந்தோணிதாஸ் தலைமையில் 15 நாள்களுக்கு முன்பு கடை மற்றும் வீட்டின் உரிமையாளர்களுக்கு ஆக்கிரமிப்பு அகற்றுதல் சம்பந்தமாக நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், உதவி கோட்டப் பொறியாளர் அந்தோணிதாஸ் தலைமையில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. சேத்துப்பட்டு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், கடை மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் சிலர், தாங்களாகவே ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்வதாக 2 நாள்கள் அவகாசம் வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.