திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம். பி. , யுமான ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவண்ணாமலை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கலையரசன், வந்தவாசி இளைஞர் காங்கிரஸ் பிஎஸ்என்எல் ஆலோசனை குழு உறுப்பினர் பிரேம், மூத்த நிர்வாகிகள் வந்தவாசி சங்கர், தெய்யார் செல்வம், வட்டார தலைவர்கள் வேம்பு, செல்வம், செல்வ விநாயகமூர்த்தி, அமைப்புசாரா மாவட்ட தலைவர் ஆவணவாடி வெங்கடேஷ் ஆகியோர் புகார் மனு அளித்தனர்.