தி.மலை: தொழிற்சங்க மையத்தின் 56வது ஆண்டு அமைப்பு தின நிகழ்ச்சி

68பார்த்தது
தி.மலை: தொழிற்சங்க மையத்தின் 56வது ஆண்டு அமைப்பு தின நிகழ்ச்சி
இந்திய தொழிற்சங்க மையத்தின் 56வது ஆண்டு அமைப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை தமிழ் மின் நகரில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிஐடியு தொழிற்சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் காங்கேயன் தலைமை தாங்கினார்.

மாநிலச் செயலாளர் டி. குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பொதுக்குழு கூட்ட முடிவுகளை விளக்கிப் பேசினார். தொடர்ந்து, உலக தொழிற்சங்க இயக்க வரலாறு என்ற தலைப்பில் மாவட்டச் செயலாளர் ரா. பாரி பேசினார். இதில், தொழிற்சங்கத் தலைவர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி