திருவண்ணாமலை: வணிகா் சங்க நிா்வாகிகள் சாலை மறியல்

59பார்த்தது
திருவண்ணாமலை: வணிகா் சங்க நிா்வாகிகள் சாலை மறியல்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் தனியார் திருமண மண்டபம் மற்றும் சாலையோரங்களில் தற்காலிக கடைகள் அமைத்து துணி மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை விற்பனை செய்து வருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் பண்டிகை காலங்களில் இது தொடர்கிறது. இந்த நிலையில், செய்யாறு அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் சார்- ஆட்சியர் மற்றும் திருவத்திபுரம் நகராட்சி ஆணையர் ஆகியோரிடம் தற்காலிக கடைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்து இருந்தனர். 

இந்த எதிர்ப்பு காரணமாக சில தனியார் மண்டபங்களை வாடகைக்கு எடுத்து தற்காலிக கடை அமைத்திருந்த வணிகர்கள் காலி செய்து விட்டு வெளியேறினர். இந்த நிலையில், பேருந்து நிலையம் அருகே நிரந்தர கடை ஒன்றை திருச்சியைச் சேர்ந்த ஒருவர் வாடகைக்கு எடுத்து அதன் உரிமையாளரிடம் ஓராண்டுக்கு ஒப்பந்தம் செய்து புதிதாக துணி வியாபாரத்தை தொடங்கினார். இதை அறிந்த செய்யாறு நகர அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர், சென்று தற்காலிகமாக கடை வைத்து இங்கு வியாபாரம் செய்யக் கூடாது. 

இதனால் இங்கு உள்ளவர்களுக்கு துணி வியாபாரம் பாதிக்கப்படும் என வாக்குவாதம் செய்தனர். இதில் ஆத்திரமடைந்த செய்யாறு அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மாவட்ட துணைத் தலைவர் தெய்வசிகாமணி தலைமையில் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி