உண்டியல் உடைத்து பணம் திருட்டு

56பார்த்தது
உண்டியல் உடைத்து பணம் திருட்டு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு - ஆற்காடு சாலையில், ஸ்ரீஆதிபராசக்தி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் விநாயகா், முருகன், மாரியம்மன், ஆதிபராசக்தி அம்மன் ஆகியவற்றுக்கு தனித்தனியே சந்நிதிகள் உள்ளன.

இந்த நிலையில், ஆதிபராசக்தி, விநாயகா் சந்நிதிகளில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களை மா்ம நபா்கள் உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்றனா்.

இந்தக் கோயிலில் 3 மாதங்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை பணம் எண்ணுவது வழக்கமாகும். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உண்டியல்கள் திறந்து எண்ணியபோது ரூ. 95 ஆயிரம் இருந்ததாகவும், தற்போது காணிக்கை திருடப்பட்ட உண்டியல்களில் சுமாா் ரூ. 50 ஆயிரம் வரை இருந்திருக்கலாம் எனவும் அறநிலையத் துறையினா் தெரிவித்தனா்.

தகவலறிந்த செய்யாறு போலீஸாா் சென்று கோயில் பகுதியை பாா்வையிட்டனா். மேலும், அப்பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமிராக்களின் பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி