சாலையோரம் நின்று கொண்டிருந்தவர் மீது தாக்குதல்

56பார்த்தது
சாலையோரம் நின்று கொண்டிருந்தவர் மீது தாக்குதல்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை பூர்விகமாக கொண்டவர் பாக்கியராஜ். இவர் குடும்பத்துடன் பெங்களுருவில் தங்கி வேலைபார்த்து வருகிறார். இவர்கள் பரமந்தல் கிராமத்தில் உள்ள புதூர் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு வந்து தரிசனம் செய்துவிட்டு. வாடகை காரில் பெங்களூருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

இவர்கள் சென்று கொண்டிருந்த வாகனம் கிருஷ்ணகிரி அடுத்த தொடரப்பலி காப்புக்கட்டில் திடீரென்று பழுதாகி நின்றது. இதனால் சாலையின் ஓரத்தில் நின்றபோது அந்த வழியாக காரில் வந்த உள்ளூர் பிரமுகர் ஒருவர், பெண்கள் தனியாக நிற்பதை பார்த்து, அவர்களிடம் ஆபாசமாக பேசினார் இதனால் பாக்யராஜிக்கும் உள்ளூர் பிரமுகருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாக மாறியது. கார் பழுதடைந்த நிலையில், காரை அங்கிருந்து எடுக்கும் படி கூறி டிரைவரை தாக்கியதால் அவர் எங்கு போனார் என்றே தெரியவில்லை என்று பாக்யராஜ் கூறினார். மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறிய பாக்யராஜ், எங்கள் கோவிலுக்கு நாங்கள் சென்றோம், இனிமேல் இந்த ஊருக்கே வரமாட்டேன், நாங்கள் தொடர்ந்து கெஞ்சியும் தகாத சொற்கள் சொல்லி எங்களை தாக்கினர் என்று கண்ணீர் மல்க கூறியது நெஞ்சை பதைக்க வைத்தது.

இதற்கிடையில் திமுக ஒன்றிய செயலாளர் அறிஞர் என்பவர் பாக்யராஜ் தன்னை தாக்கியதாக கூறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

தொடர்புடைய செய்தி