கண்ணமங்கலம்: கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஏற்பாடு

0பார்த்தது
கண்ணமங்கலம்: கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஏற்பாடு
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த வண்ணாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட வண்ணாத்திகுளம் மலையடிவாரத்தில் ரூ. 6.83 கோடியில் அமைய உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாற்று இடத்தில் அமைப்பதற்கு ஏற்பாடு செய்த எம்.பி எம். எஸ். தரணிவேந்தன் அவர்களிடம் பொதுமக்கள் மனு அளித்திருந்தனர். மக்களின் கோரிக்கைகளை கவனமுடன் கேட்டறிந்த அமைச்சர் எ.வ. வேலு மாற்று இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஒப்புதல் அளித்தார். 

இதனைத் தொடர்ந்து மாற்று இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தங்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த எம்.பி எம். எஸ். தரணிவேந்தனுக்கு நேற்று வண்ணாங்குளம், பெரிய அய்யம்பாளையம் பொதுமக்கள் நேரில் சென்று சால்வையணிவித்து நன்றி தெரிவித்தனர். மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், அமைச்சர் எ.வ. வேலுவுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி