அண்ணாமலை உருவப்படத்தை எரித்து போராட்டம்

54பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகர பகுதியில், அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களை , அவதூறு வார்த்தைகளால் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து , திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி. கே. மோகன் தலைமையில் , அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் செய்யாறு நகரத்தில் ஊர்வலமாகச் சென்று அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் செய்தனர்.

இந்த போராட்டத்தில், அமைப்புச் செயலாளர் முக்கூர் சுப்பிரமணியன் , எம் ஜி ஆர் மன்ற மாநில துணைச் செயலாளர் அட்வகேட் ஜாகிர் உசேன், மாவட்ட இணை செயலாளர் விமலா மகேந்திரன், பொருளாளர் சுப்பராயன் , ஒன்றிய செயலாளர்கள் அருகாகவூர அரங்கநாதன், மகேந்திரன், குணசீலன், வயலூர் ராமநாதன், திருமூலன், லோகேஸ்வரன், தனசேகரன், நகர செயலாளர்கள் வெங்கடேசன் ஓட்டல் பாஷா உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி