திருவண்ணாமலை அனைத்து வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்

85பார்த்தது
திருவண்ணாமலை அனைத்து வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், திருவத்திபுரம் அனைத்து வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஏ. அருணகிரி தலைமை வகித்தார். செயலர் கே. இ. ராமலிங்கம், பொருளாளர் ஏ. வி. ராமநாதன், சட்ட ஆலோசகர் எம். எஸ். சங்கரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் போது, திருவத்திபுரம் நகராட்சி சார்பில் மார்க்கெட் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட நிரந்தரக் கடைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், மார்க்கெட் தென்பகுதியில் நீண்ட நாள்களாக நடைமுறையில் இருந்து வந்த வாரச்சந்தையை (ஞாயிறு சந்தை) மக்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். 

திருவத்திபுரம் நகர எல்லைக்குள் உள்பட்ட கடை வீதி மற்றும் அனைத்து வீதிகளிலும் கால்நடைகள் நடமாட்டம் எந்த நேரமும் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள், வியாபாரிகள் பயமின்றி செல்ல முடியவில்லை. மேலும், துர்நாற்றமும் ஆடு, மாடு கழிவுகளால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் வழுக்கி விபத்திலாமல் செல்ல முடியாத நிலையும் உள்ளது. இதுகுறித்து நகராட்சியிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மீண்டும் நகராட்சி மற்றும் நகர்மன்றத்திடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். வாடகை கடைக்கு வணிகர்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி