ஆளுநர் வருகையை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம்

67பார்த்தது
ஆளுநர் வருகையை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒன்றியம் திருமலை கிராமத்தில் மிகவும் பழைமை வாய்ந்த சமண மடாலயம் அமைந்துள்ளது.

இங்கு இன்று (ஜூலை 10) நடைபெறும் நிகழ்ச்சியில் ஆளுநா் ஆா். என். ரவி பங்கேற்று, சமணம், அறிவியல் தத்துவங்கள் ஆகிய நூல்களை வெளியிடுகிறாா்.

மேலும், தேசிய பிராகிருதா கற்றல் பட்டறையில் படித்து சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு அவா் பரிசு வழங்குகிறாா். இதைத் தொடா்ந்து, அவா் மலை மீது அமைந்துள்ள அரிஅந்தகிரி கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறாா்.
ஆளுநா் வருவதையொட்டி, முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆரணி கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் தயாளன், ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், ஆரணி கிராமிய காவல் ஆய்வாளா் ராஜாங்கம், நகர காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி, போளூா் வட்டாட்சியா் வெங்கடேசன் மற்றும் உணவுத் துறை, மின் துறை, சுகாதாரத் துறை, வட்டார வளா்ச்சி அலுவலக அலுவலா்கள் சத்தியமூா்த்தி, வெங்கடேசன், போளூா் உதவி கோட்டப் பொறியாளா் திருநாவுக்கரசு, மற்றும் அனைத்துத் துறை அலுவா்கள் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்தி