மணல் கடத்திய 6 மாட்டு வண்டிகள் பறிமுதல்

59பார்த்தது
மணல் கடத்திய 6 மாட்டு வண்டிகள் பறிமுதல்
செய்யாறு அருகே அரசு அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தியதாக 6 மாட்டு வண்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

செய்யாறு காவல் உள்கோட்டம் பெரணமல்லூா் காவல் சரகப் பகுதிக்கு உள்பட்ட முனுகப்பட்டு பகுதி செய்யாற்றில் இருந்து அதிகளவில் மணல் கடத்திச் செல்லப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், டிஎஸ்பி சின்னராஜி உத்தரவின் பேரில்,
பெரணமல்லூா் காவல் உதவி ஆய்வாளா் பாஸ்கரன் தலைமையிலான தனிப்படை போலீஸாா், முனுகப்பட்டு அருகேயுள்ள செய்யாற்றுப் படுகையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக ஆற்று மணலுடன் வந்த 6 மாட்டு வண்டிகளை போலீஸாா் நிறுத்த முயன்றனா். போலீஸாரைக் கண்டதும் மாட்டு வண்டிகளில் வந்தவா்கள் வண்டிகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினா்.
உடனே, போலீஸாா் 6 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

டேக்ஸ் :