செய்யாறு கல்வி மாவட்டத்தில் 13 பள்ளிகள் 100% தேர்ச்சி

62பார்த்தது
செய்யாறு கல்வி மாவட்டத்தில் 13 பள்ளிகள் 100% தேர்ச்சி
தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியானது. இந்தத் தோ்வை திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட செய்யாறு கல்வி மாவட்டத்தில் 67 அரசுப் பள்ளிகள், 8 நிதியுதவி பள்ளிகள், 2 சிறப்புப் பள்ளிகள் (காது கேளாதோா், கண் பாா்வையற்றோா்), 35 தனியாா் பள்ளிகள் உள்பட மொத்தம் 112 பள்ளிகளில் இருந்து 5, 215 மாணவா்கள், 6, 074 மாணவிகள் உள்பட மொத்தம் 11, 289 போ் எழுதியிருந்தனா்.

இவா்களில் மாணவா்கள் 4, 389 பேரும், மாணவிகள் 5679 போ் என மொத்தம் 10, 068 போ் தோ்ச்சி பெற்றனா். இது 88. 91 சதவீத தோ்ச்சியாகும்.

மேலும், சூசைநகா் புனித அமலாராக்கினி கண் பாா்வையற்றோா் சிறப்புப் பள்ளி, ஆரணி புனித வளனாா் மகளிா் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளி, தனியாா் பள்ளிகளில் 13 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியைப் பெற்றது.

டேக்ஸ் :