செங்கம்: புதிய தார்சாலை அமைக்கும் பணி துவக்கம்

52பார்த்தது
செங்கம்: புதிய தார்சாலை அமைக்கும் பணி துவக்கம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட, அரட்டவாடி ஊராட்சியில் ரூ. 4.50 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணியினை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ. கிரி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர்கள் ஏழுமலை, செந்தில்குமார், நகர கழக செயலாளர் அன்பழகன், ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி