திருவண்ணாமலை அசலியம்மன் கோயில் தெருவில் ஜெயின் ஜூவல்லரி என்ற நகைக்கடை வைத்து நடத்தி வருபவர் நரேந்திரகுமார் இவரது மகன்கள் ஜித்தேஷ், ஹரிஹந்த் இவர்களது வீடு அய்யங்குளத் தெருவில் உள்ளது. நேற்று இரவு கடையை பூட்டிக் கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர் பின்தொடர்ந்து வந்த கும்பல் அவர்களை அடித்து உதைத்து காரில் கடத்திச் சென்றது பிறகு அந்த கும்பல் நரேந்திரகுமாரை தொடர்பு கொண்டு ரூ. 70 லட்சம் கொடுத்தால் மகன்களை விட்டு விடுவதாக கூறினார்களாம் அதற்கு நரேஷ்குமார் ரூ. 10 லட்சம்தான் இருப்பதாக கூறினாராம்
அந்த பணத்தை எடுத்துக் கொண்டு திருவண்ணாமலை-திருக்கோயிலூர் ரோடு ரிங் ரோடுக்கு வரும்படி கடத்தல்காரர்கள் சொன்னதால் பணத்தை எடுத்துக் கொண்டு நரேஷ்குமார் சென்றார். இதுபற்றி போலீசுக்கு தெரிய வந்தது
ரிங்ரோட்டில் பணத்தை பெற்றுக் கொண்ட கடத்தல் கும்பல் ஜித்தேஷ், ஹரிஹந்த் ஆகியோரை விடுவித்து விட்டு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றது மேல் செங்கம் அருகே காரை மடக்கி அதில் இருந்த ஹன்ஸ்ராஜ், பெங்களுரைச் சேர்ந்த விக்ரம், வாசிம், மனோ என்கிற கபாலி ஆகிய 4 பேரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
இது சம்மந்தமாக போலீசார் ரூ. 10 லட்சத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.