மாதாந்திர உதவித்தொகை - விண்ணப்பிக்க 20-ஆம் தேதி கடைசி

81பார்த்தது
மாதாந்திர உதவித்தொகை - விண்ணப்பிக்க 20-ஆம் தேதி கடைசி
திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ2000- பெற்றுவரும் மாற்றுத்திறனாளி நபர்கள் ஒவ்வொரு ஆண்டும் தான் நிலையாக அதே கிராமத்தில் உயிருடன் உள்ளார் என்பதற்கான சான்றினை கிராம நிர்வாக அலுவலரிடம் (Life Certificate) பெற்று வழங்கப்பட்டு வருகிறது. 2024-2025ஆம் நிதியாண்டு தொடங்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக மாதம் ரூ 2000 பெறும் பயனாளிகள் தொடர்ந்து இப்பராமரிப்பு உதவித்தொகையினை இவ்வாண்டிற்கு தடையில்லாமல் பெற தங்களின் கிராம நிர்வாக அலுவலரிடம் தான் அந்த கிராமத்தில் நிலையாக உயிருடன் வசித்து வருவதாக சான்று பெற்று வரும் ஜூ-2024 20-ஆம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வழங்கிடுமாறு மாவட்டநிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் நேரிலோ அல்லது பாதுகாவலர் வாயிலாகவோ அல்லது கடிதம் வாயிலாகவோ (Life Certificate) வழங்கிடலாம். வழங்கும் போது மாற்றுத்திறனாளி நபரின் ஆதார் அட்டைநகல், குடும்ப அட்டைநகல், தேசிய அடையாளஅட்டை நகல், மருத்துவ சான்று நகல், UDID கார்டு நகல், தற்போது உபயோகத்தில் உள்ள தொலைபேசி எண் மற்றும் உதவித்தொகை பெற்று வரும் வங்கி கணக்கு புத்தக நகலுடன் வழங்கிடுமாறும். மேலும் தகவலுக்காக தொலைபேசி எண் 9499933495-க்கு தொடர்பு கொள்ளவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.