திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, செங்கம் நகரத்திற்குட்பட்ட விவேகானந்தா பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட உள்ள அரசு கலை (ம) அறிவியல் கல்லூரியின் கட்டிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவை குறித்து திருவண்ணாமலை மாவட்ட கழக துணை செயலாளரும், செங்கம் சட்டமன்ற உறுப்பினருமான மு. பெ. கிரி, வேலூர் மண்டல கல்வி இணை இயக்குநர் மலர், மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதீபன் ஆகியோருடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், நகர கழக செயலாளர் மு. அன்பழகன், நகர மன்ற தலைவர் எச். சாதிக்பாட்ஷா, மு. பேரூராட்சி தலைவர் சி. முருகன், மாவட்ட அணி துணை தலைவர் கட்டமடுவு சேட்டு, மாவட்ட பிரதிநிதி பாண்டியன், நகர துணை செயலாளர் பழக்கடை பாலு உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.