மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு

68பார்த்தது
மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த மேல்திருவடத்தனுாரை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன், 53. இவர், தனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தை வேறு ஒருவருக்கு குத்தகை விட்டிருந்தார். அதனை மீண்டும் தன் பெயருக்கு மாற்றிக் கொண்டார். இந்நிலையில், நேற்று காலை நிலத்திற்கு சென்ற கிருஷ்ணன், அங்கிருந்த முட்புதர்களை அகற்றி சீரமைத்து கொண்டிருந்தார். அப்போது பலத்த காற்று வீசியதில், விவசாய நிலத்திற்கு மேலே சென்ற அதிக உயரழுத்தம் கொண்ட மின் கம்பி அறுந்து கீழே விழுந்தது. இதில், கிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தானிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி