திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் செம்படத்தெரு பகுதியில் திருமண மண்டபம், தனியார் ஆஸ்பத்திரி உள்பட பல்வேறு கடைகள் உள்ளன. இங்கு ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் தங்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தி விடுகின்றனர். ஆட்டோக்களும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகிறது. குறுகலாக உள்ள தெரு என்பதால் கடை வியாபாரிகள் தங்கள் கடையின் முன் நிழலுக்காக சிமெண்டு ஷீட்டுகள், மேடைகள் அமைத்துள்ளனர்.
இதனாலும் அந்தத் தெருவில் மோட்டார் சைக்கிளை நிறுத்த கூட இடமில்லை. எனவே இந்தத் தெருவில் பொதுமக்கள் வசதிக்காக சிமெண்டு ஷீட்டுகள், மேடைகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.