வளா்ச்சி அடைந்த பாரதம் திட்ட விழிப்புணா்வுக் கூட்டம்

82பார்த்தது
வளா்ச்சி அடைந்த பாரதம் திட்ட விழிப்புணா்வுக் கூட்டம்
செங்கம் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் மத்திய அரசின், ‘நமது லட்சியம் வளா்ச்சி அடைந்த பாரதம் திட்டத்தின் கீழ், கிராம மக்களை நேரடியாகச் சந்தித்து மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், அந்தத் திட்டங்களை மக்கள் பயன்டுத்திக் கொள்வது குறித்தும் அரசு அதிகாரிகளுடன் விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது. செங்கத்தை அடுத்த உச்சிமலைக்குப்பம் ஆயா்பாடி பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பாஜக விவசாய அணி மாவட்ட பொதுச்செயலா் கோகுலம் சுப்பிரமணி தலைமை வகித்தாா். உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் மாநிலச் செயலா் அறவாழி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக உத்தரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ஐ. ஜி. யும், மாநிலங்களவை உறுப்பினருமான பிரிஜிலால் கலந்து கொண்டு கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து விளக்கினாா். தொடா்ந்து, மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு நபாா்டு வங்கிக் கடனுதவி, வேளாண்மைத் துறை மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு இடுபொருள்களை பிரிஜிலால் வழங்கினாா். இதைத் தொடா்ந்து, வங்கி அதிகாரிகள், ஏரிவாயு முகமை அலுவலா்கள், வேளாண்மைத் துறை அதிகாரிகள், தபால்துறை அதிகாரிகள் கூட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினா். இதில் தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலா்கள் , பொருளாளா் உள்ளிட்ட கிராம மக்கள், அரசுத் துறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்தி