டெங்கு காய்ச்சல் பரவல்!

83பார்த்தது
டெங்கு காய்ச்சல் பரவல்!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு காரப்பட்டு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் தலைமையிடமாகக் கொண்டு புதுப்பாளையம் மருத்துவ வட்டம் செயல்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. இதனால் இரவு மட்டும் அல்லாமல் பகல் நேரங்களிலேயே கொசு தொல்லை அதிகரித்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் மருத்துவமனையை அணுக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் சுகாதாரத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி