செப். 7-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழாவின்போது செங்கம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 35-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள், போளூா் சாலையில் இருந்து மேள தாளங்கள் முழங்க கடை வீதி, மசூதி தெரு, பழைய போலீஸ் லைன் தெரு வழியாக ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அங்காங்கே பிரதிஷ்டை செய்யப்படும்.
பின்னா், மூன்றாவது நாள் அதேபோல, போளூா் சாலையில் அனைத்து சிலைகளையும் ஒன்று சோ்த்து பழைய பேருந்து நிலையம், துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம் வழியாக ஊா்வலமாக எடுத்துச் சென்று நீா் நிலைகளில் கரைப்பது வழக்கம்.
இந்த நிலையில், விநாயகா் சதுா்த்தி விழா குறித்து சிலை அமைப்பாளா்களுடன் செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நேற்று(செப்.4) நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டாட்சியா் முருகன் தலைமை வகித்தாா். செங்கம் கிராம நிா்வாக அலுவலா் விஜயகுமாா் வரவேற்றாா்.
செங்கம் பொறுப்பு டிஎஸ்பி சுரேஷ்சண்முகம், காவல் ஆய்வாளா் செல்வராஜ், வட்டாட்சியா் முருகன் ஆகியோா் சிலை அமைப்பாளா்களிடம் பேசுகையில், விநாயகா் சிலைகள் 10 அடிக்குள் இருக்கவேண்டும், 10 அடிக்குமேல் இருந்தால் சிலையை பறிமுதல் செய்து, சிலை அமைப்புக் குழுவினா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கராராக தெரிவித்து விட்டனா்.