வினாத்தாள்கள் அனுப்பும் பணியை ஆய்வு செய்த கலெக்டர்

84பார்த்தது
வினாத்தாள்கள் அனுப்பும் பணியை ஆய்வு செய்த கலெக்டர்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் தொகுதி – IV தேர்வு வருகின்ற 09. 06. 2024 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு வினா விடைதாள்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட கருவூலத்திலிருந்து, 8 சார் கருவூலங்களுக்கு அனுப்பும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப. , இன்று (07. 06. 2024) நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி